சென்னை: காதலி வீட்டில் நகைகள்- தி.நகர் ஜூவல்லரி கொள்ளையன் சிக்கியது எப்படி? – Vikatan

சென்னைச் செய்திகள்

அவர் அளித்த தகவலின்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ் என்கிற `மார்க்கெட்’ சுரேஷ் என்பவரை போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது சுரேஷ், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் மீது ஏற்கெனவே குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. பூட்டுக்களை உடைப்பத்தில் சுரேஷ், கில்லாடி என போலீஸார் தெரிவித்தனர். சுரேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி கொள்ளையடிக்கப்பட்ட சில நகைகளை மீட்டுள்ளனர்.

தங்க நகைகள் கொள்ளை
representational image

சுரேசுடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொருவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவரும் சிக்கினால்தான் கொள்ளையடிக்கப்பட்ட முழு நகைகள், வெள்ளிப் பொருள்களை மீட்க முடியும் என தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து கொள்ளைச் சம்பவத்தை விசாரித்துவரும் உயரதிகாரி ஒருவர், “கொள்ளைச் சம்பவம் நடந்தபிறகு அமைக்கப்பட்ட தனிப்படையினர் இரவு, பகல் பாராமல் ஏன் வீட்டுக்குக்கூட செல்லாமல் விசாரணை நடத்திவந்தனர். அதனால்தான் கொள்ளை நடந்த சில தினங்களுக்குள் கொள்ளையர்களைப் பிடிக்க முடிந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள், தங்கக்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், வெள்ளிப் பொருள்களை மீட்கும் பணி நடந்துவருகிறது. முதற்கட்டமாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மார்க்கெட் சுரேஷ் என்ற பிரபல கொள்ளையன் சிக்கியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவரின் காதலி, திருவள்ளூர் மாவட்டத்தில் பழைய இரும்பு கடை நடத்திவருகிறார். அவரின் வீட்டிலிருந்துதான் சில நகைகளையும் வெள்ளியையும் மீட்டுள்ளோம்“ என்றார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-one-over-t-nagar-robbery-in-thiruvallur