கொரோனாவால் சென்னை குடிநீர் வாரியத்துக்கு இப்படியொரு சிக்கல்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

கொடுங்கையூர், கோயம்பேடு உள்ளிட்ட நான்கு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையங்களை அமைத்து, அங்கு சுத்திகரிக்கப்படும் நீரை ஏரிகளில் கலக்கவிட்டு, அந்த நீரை மறுசுத்திகரிப்பு செய்து குடிநீராக வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் நாள்தோறும் 20 கோடி லிட்டர் குடிநீரை மாநகரவாசிகளுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான தொழில்நுட்ப உதவியை. சென்னையில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் வழங்க உள்ளது.

இதற்காக தூதரகம் அமைத்துள்ள தொழில்நுட்ப வழிகாட்டுதல் குழு, சென்னை குடிநீர் வாரியத்திடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையும் தயார் நிலையில் உள்ளது.

கூட்டத்தில் ஒரு கொரோனாக்காரர்… சென்னைக்கு எச்சரிக்கை!

இதனை தொடர்ந்து, கழிவுநீரை குடிநீராக்கும் பணிகளை விரைவில் தொடங்க வாரியம் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில்,கொரோனா பரவல் காரணமாக பிரிட்டன் தொழில்நுட்ப குழு சென்னைக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், சென்னையிலும் கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இவற்றி்ன் காரணமாக, கழிவுநீரை குடிநீராக்கும் திட்டத்தை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விண்ணைமுட்டும் வெங்காயத்தின் விலை…மாநகரவாசிகள் கண்ணீர்!

பிரிட்டன் தொழில்நுட்ப குழு நவம்பர் மாத இறுதியில் சென்னை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து டிசம்பர் முதல் வாரத்தில் இத்திட்டப் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-metro-water-sources-says-due-to-corona-delay-in-begin-sewage-treatment-project/articleshow/78893743.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article6