ஆசியாவின் மிகப்பெரிய, உலகின் மிகப்பெரிய என்ற பட்டியல்களில் இடம்பெறவல்ல இந்த சாதனைக் கட்டிடங்கள் சிலவற்றைக் குறித்து இப்போது பார்ப்போம்
செண்ட்ரல் ரையில் நிலையம்:
புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று அண்மையில் பெயர் மாற்றபட்ட இந்தக் கட்டிடம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய இரயில்) நிலையங்களுள் ஒன்றாகும்.
ஆனாலும், செண்ட்ரல் ரயில் நிலையம் என்றூ சொன்னால்தான் இண்றூம் மக்களுக்குப் புரியும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது.
இந்த ரயில் நிலையம் தற்போது தென்னக இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1856 ஆம் ஆண்டு ஹென்றி இர்வின் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்ட இந்த இரயில் நிலையம், இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.
மூன்றில் ஒருவருக்கு எதிர்ப்பு சக்தி… அப்போ மாநகரில் கொரோனா சமூக பரவலா?
தென்னக ரயில்வே தலைமையகம்:

1921ஆம் ஆண்டு என்.கிரேசன் என்ற ஆங்கிலேய ரயில்வே பொறியாளரால் கட்டப்பட்ட கட்டிடம் இது. தற்போது தென்னக ரயில்வே நிர்வாகத்தின் தலைமையகமாக விளங்குகிறது.
சென்னை பூங்கா ரயில்நிலையத்திலிருந்து நடந்துபோகக்கூடிய தூரத்தில்தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்:

சுதந்திரத்துக்கு முன்பு, பிரிட்டிஷ் அமைத்த மூன்று நீதிமன்றங்களில் ஒன்றுதான் சென்னை உயர்நீதி மன்றம். மற்ற இரண்டு நீதிமன்றங்களில் ஒன்று மும்பையிலும் மற்றொன்று கொல்கத்தாவிலும் நிறுவப்பட்டது.
தொடக்கத்தில் சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இந்தக் கட்டிடம், 1862 இல் ஹை கோர்ட் ஆஃப் மெட்ராஸ் என்று பெயர் மாற்றப்பட்டது.
இந்தோ-சார்சியனிக் முறையில் 1888-ம் ஆண்டு ஜே.டபிள்யூ.பிராஸிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1892இல் என்றி இர்வின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டி முடிக்கப்பட்டது.
ரிப்பன் மாளிகை:

இந்தோ சரசனிக் பாணியில், ரூ. 7.5 லட்சம் செலவில் , 132 அடி கொண்ட மைய கோபுரத்துடன், 252 அடி நீளம், 126 அடி அகலத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.
உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயர் சூட்டப்பட்டு, 1913- ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி திறக்கப்பட்டது.
மற்ற கட்டிடங்களை ஆங்கிலேயர்கள வடிவமைத்துக் கட்டிய நிலையில், இந்தக் கட்டிடம், லோகநாத முதலியார் என்பவரால் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கலச மஹால்:

சேப்பாக்கம் அரண்மனை என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும். கலச மஹால் (Khalsa Mahal) என்பது இந்தோ-சரசெனிக் கட்டிடப்பாணியில் பால் பென்பீல்டு என்ற ஆங்கில பொறியாளரால் வடிவமைக்கப்பட்டு 1801ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடம் ஆகும்.
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கட்டிடத்தை ஆங்கிலேய அரசு 1859ம் ஆண்டு தன்வசமாக எடுத்துக்கொண்டது. 1768 முதல் 1855 வரை ஆற்காடு நவாப் இங்கு வசித்து வந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/palaces-of-british-madras-now-in-chennai/articleshow/78864533.cms