சென்னை: திருமணமான ஒன்றரை மாதத்தில்… எலெக்ட்ரிஷியன் எடுத்த விபரீத முடிவு! – Vikatan

சென்னைச் செய்திகள்

அவரை வீட்டுக்கு வரும்படி சுரேஷ் பலதடவை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் சுரேஷ் மனமுடைந்து காணப்பட்டார். இருப்பினும் அவர் வேலைக்குச் சென்றுவந்தார். இந்தச் சமயத்தில், வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று மாலை சுரேஷ் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்ற அவர் கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாக கதவைத் திறக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்து வீட்டில் உள்ளவர்கள் கதவைத் தட்டினர். ஆனால் சுரேஷ் கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது, சுரேஷ் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

தற்கொலை
Representational Image

அதைப்பார்த்து அவரின் அம்மா செல்வி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து திருநின்றவூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். சுரேசின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ், தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணைக்குப் பின்னர் உண்மையான காரணம் தெரிய வரும்.

Source: https://www.vikatan.com/news/crime/electrician-commits-suicide-in-chennai-thiruninravur