சென்னை கோயம்பேட்டில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்.. போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் மேம்பாலம் பணி காரணமாக இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் எப்படி செல்ல வேண்டும் என்பது குறித்து போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சென்னையில் கோயம்பேடு 100 அடி சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள், சென்னை நகருக்குள் செல்லும் பேருந்துகள், காய்கறி வாகனங்கள் என எப்போதும் பிஸியாக இருக்கும்.

இந்த சாலையில் உள்ள சிக்னலில் வாகனங்கள் நீண்ட வரிசையில் எப்போதும் காத்திருக்கும். காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் இச்சாலையை கடப்பது மிக கடினமாக இருக்கும்.

imageகோயம்பேடு காய் கனி விற்பனை அங்காடியை திறக்க உத்தரவிடக்கோரி மனு – அரசு பதில் தர ஹைகோர்ட் உத்தரவு

மேம்பாலம் கட்டப்படுகிறது

இதையடுத்து சென்னை கோயம்பேடு 100 அடி சாலை மற்றும் காளியம்மன் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நிதி ஓதுக்கிடு செய்யப்பட்டு பணிகளும் துவங்கி உள்ளன. மேம்பாலம் கட்டும் பணிகாரணமாக அந்த பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து போலீசார்

இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், சென்னை கோயம்பேடு 100 அடி சாலை மற்றும் காளியம்மன் சாலை சந்திப்பில் நெடுஞ்சாலை துறையினரால் மேம்பால கட்டுமான பணி நடைபெற உள்ளது. இதனால் நேற்று நள்ளிரவு முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருமங்கலம் வழியாக

கோயம்பேடு 100 அடி சாலையில் திருமங்கலத்திலிருந்து காளியம்மன் சாலை செல்ல விரும்பும் இலகுரக வாகனங்கள் 100 அடி சாலையில் 200 மீட்டர் தூரம் தொலைவில் அடையார் ஆனந்தபவன் எதிரில் திரும்பி காளியம்மன் கோயில் வழியாக செல்லலாம்.

மாநகர பேருந்து நிலையம்

100 அடி சாலையில் திருமங்கலத்திலிருந்து காளியம்மன் கோயில் செல்ல விரும்பும் வாகனங்கள் 100 அடி சாலையில் 500 மீட்டர் தொலைவில் மாநகர பேருந்து நிலையம் எதிரே திரும்பி காளியம்மன் கோயில் தெருவிற்கு செல்லாம்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது,

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/traffic-diverted-on-the-chennai-koyambedu-100-foot-road-from-today-due-to-flyover-work-401563.html