சென்னையில் 50% மக்கள் முகக்கவசம் அணிவதில்லை : சென்னை மாநகராட்சி ஆணையர் – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப்படம்

சென்னையில் உள்ள மக்களில் 50 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில்,

கரோனா பரவல் இருந்தாலும் சென்னையில் 50 சதவீத மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. பருவமழை காலங்களில் வெப்பம் குறைந்து காணப்படும் என்பதால் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.

மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஜூலை மாதமே தொடங்கிவிட்டது. பருவமழைக் காலங்களில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/oct/30/50-of-people-in-chennai-do-not-wear-masks-chennai-corporation-authority-3495110.html