சென்னை: அண்ணனுக்கு பதில் தம்பி? – திருமண நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர் கொலை – Vikatan

சென்னைச் செய்திகள்

இந்தக் கொலை குறித்து சோமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அபிஷேக்கின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அபிஷேக்கைக் கொலை செய்தவர்கள் யார் எனப் போலீஸார் விசாரித்துவருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கொலை
representational image

இது குறித்து போலீஸார் கூறுகையில், “அபிஷேக்கின் அண்ணன் ஜோசப்ராஜ் மீது காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் சோமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் இரண்டு கும்பல் மோதிக்கொண்ட சம்பவத்தில் ஜோசப்ராஜ் கைதுசெய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஜோசப்ராஜை பழிவாங்கத் திட்டமிட்ட கும்பல்தான் அவருக்கு பதிலாக அபிஷேக்கைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் அபிஷேக்கைக் கொலை செய்தவர்களைத் தேடிவருகிறோம்” என்றனர்.

திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-college-student-murdered-near-pallavaram