சென்னை, கோவை செல்லும் ரயில்கள்.. தூத்துக்குடி பயணிகளை மிகவும் கவலைக்குள்ளாக்கும் முக்கிய மாற்றம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

தூத்துக்குடி: குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடியில் இருந்து இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலுக்கான இணைப்பு ரயில் பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாகர்கோவில்-கோவை இடையே மதுரை வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இணைப்பு ரெயிலாக இயக்கப்ட்டது. இதுவும் இப்போது நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு ரயில்கள் மற்றும் ரயில் பாதைகள் தனியாருக்க தாரைவார்க்கப்பட உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு ரயில்களை விரைவில் தனியார்கள் இயக்க போகிறார்கள். அதற்கு வசதியாக சில ரயில் நிறுத்தங்களை நீக்க தென்னக ரயில்வே, மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, நாகர்கோவில்-கோவை இடையே மதுரை வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது.. இந்த இணைப்பு ரயில் பெட்டிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரு மார்க்கங்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.

imageபட்டென போட்டு உடைத்த ரஜினி.. வீடு தேடி சந்தித்த குருமூர்த்தி.. திடீர் திருப்பம்.. பரபர பின்னணி!

இணைப்பு ரயில் நீக்கம்

நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்(வ.எண்.22667) செல்ல விரும்பும் தூத்துக்குடி பயணிகளுக்கு தூத்துக்குடியில் இருந்து மணியாச்சிக்கு ஒரு பாசஞ்சர் ரயில்(வ.எண்.56747) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மணியாச்சி ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 11.15 மணிக்கு வந்துசேரும்.

மணியாச்சி வர வேண்டும்

மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயிலில்(வ.எண்.22668) தூத்துக்குடி பயணிகள் மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஒரு பாசஞ்சர் ரயில்(வ.எண்.56748) நள்ளிரவு 3.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் சென்றடையும்.

இணைப்பு ரயில்கள் இல்லை

குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடியில் இருந்து இணைப்பு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கான இணைப்பு ரயில் பெட்டிகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக தூத்துக்குடியில் இருந்து பாசஞ்சர் ரயில் மூலமாக மணியாச்சி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு செல்ல வேண்டும். இதற்காக தூத்துக்குடி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் (வ.எண்.56767/56768) இரு மார்க்கங்களிலும் மணியாச்சி வரை இயக்கப்பட உள்ளது.

பாசஞ்சர் ரயிலில் ஏற வேண்டும்

குருவாயூர் ரயிலில் (வ.எண்.16127/16128)சென்னை செல்ல விரும்பும் தூத்துக்குடி பயணிகள் தூத்துக்குடியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயிலில்(வ.எண்.56745) ஏறி காலை 9.15 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையம் வந்து சேர வேண்டும். அங்கிருந்து குருவாயூர் எக்ஸ்பிரசில் சென்னை செல்ல வேண்டும்.

மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயிலில்(வ.எண்.16129/16130) தூத்துக்குடி பயணிகள் மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து பாசஞ்சர் ரயிலில்(வ.எண்.56746) இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் வந்தடையும்.

மணியாச்சி தூத்துக்குடி ரயில்

அதேபோல, தூத்துக்குடியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் 9.15 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையம் வந்தடையும். அங்கிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ரயில்(வ.எண்.56768) மாலை 5.15 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையம் வந்தடைகிறது. அங்கிருந்து இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் சென்றடையும். தென்னக ரயில்வேயின் இந்த நடவடிக்கை தூத்துக்குடி மக்களுக்கு கடுமையான பாதிப்பை தரும் என்பதால் இந்த உத்தரவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/tuticorin/thoothukudi-connecting-trains-to-chennai-and-coimbatore-have-been-canceled-401982.html