6 மாதங்களுக்குப் பின் சென்னை கோயம்பேடு மொத்த பழவியாபார கடைகள் திறப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: 6 மாதங்களுக்குப் பின்னர் சென்னை கோயம்பேடு மொத்த பழவியாபார கடை திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவலில் கோயம்பேடு காய்கறி சந்தை முக்கிய காரணியாக இருந்ததால் 6 மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. பின்னர் காய்கறி சந்தை மட்டும் அண்மையில் திறக்கப்பட்டது.

ஆனால் மொத்த பழவியாபார கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. இது தொடர்பாக மொத்த பழ வியாபாரிகள் கடை உரிமையாளர்கள் அரசுக்கும் கோரிக்கை வைத்தனர்.

இதனடிப்படையில் 6 மாதங்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் சென்னை கோயம்பேடு மொத்த பழவியாபார கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து சரக்கு வாகனங்களில் இருந்து பழங்கள் கொண்டுவரப்பட்டன.

கோயம்பேடு சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 7 மணி முதல் காலை 5 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/after-6-months-chennai-koyambedu-fruits-wholesale-market-open-401997.html