இதுகுறித்து மகளிர் போலீஸார் கூறுகையில், “பொது இடத்தில் வைத்து செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தது சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த மகேந்திரன் (35), சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் (32) எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் நண்பர்கள். இளைஞர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் ஒரு வாட்ஸ்அப் குரூப் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
அதில் பெண்கள், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் குரூப்பில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அந்த குரூப்பின் அட்மின்களாக மகேந்திரன், கிருஷ்ணன் மற்றும் திண்டுக்கல், கொல்லாம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் இருந்தனர். இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இந்தக் கும்பல், இணையதளங்களிலிருந்து பெண்கள், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், போட்டோக்களை டவுன்லோடு செய்து அதை வாட்ஸ்அப் குரூப்களில் பகிர்ந்து வந்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து குரூப்பில் உள்ளவர்களின் விவரங்களைச் சேகரித்து வருகிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-3-over-sharing-objectionable-content-on-whats-app-groups