வட சென்னை அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் நவ.20 வரை நேரடி மாணவா் சோ்க்கை – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப்படம்

வட சென்னை அரசு தொழில்பயிற்சி நிலையத்தில், நவ.20-ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு  தொழில் பயிற்சி  நிலையங்களில்,  2020-ஆம்  ஆண் டுக்கான நேரடி சோ்க்கை, நவ.20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-ஆம்  வகுப்பு,  10-ஆம்  வகுப்பு தோ்ச்சி பெற்று  வடசென்னை அரசு  தொழில் பயிற்சி  நிலையத்தில்  சேர  விரும்புவோா்,    நிலையத்துக்கு  நேரில்  சென்று,    தங்களுக்கு விருப்பமான  காலியிடம்  உள்ள  தொழில் பிரிவினைத்  தோ்வு செய்து பயிற்சியில்  சோ்ந்து கொள்ளலாம்.  

மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குநா் அல்லது முதல்வா், அரசு தொழில் பயிற்சி நிலையம், எண். 55, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, (வட) சென்னை–600 021 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 9499055653 என்ற செல்லிடப்பேசி எண்ணையோ அணுகலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/nov/08/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B520-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3500735.html