சென்னை தி.நகரில் குவிந்த மக்கள்: கரோனா 2-ம் அலை அபாயம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை தி.நகர்

சென்னையில் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பொருள்கள் வாங்குவதற்கு தி.நகரில் மக்கள் குவிந்து வருவதால்  2-ம் அலை ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னை மாநகரில் கரோனா பரவல் உச்சத்தைத் தொட்டு தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருள்கள் வாங்குவதற்காக சென்னையின் முக்கியக் கடை வீதியான தி.நகரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும்  வந்து செல்கின்றனர்.

வரும் சனிக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் பொருள்கள் வாங்குவதற்காக குவிந்து வருகின்றனர்.

தீபாவளிக்கு பிறகு தமிழகத்தில் 2-ம் அலை வர வாய்ப்புள்ளது என மருந்துவக் குழு கூறியிருக்கும் நிலையில் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் வந்து செல்வது 2-ம் அலை ஏற்படும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

Source: https://www.dinamani.com/latest-news/2020/nov/09/crowds-in-chennai-corona-2nd-wave-risk-3501527.html