சென்னை: 3 மாதப் பெண் குழந்தை மீட்கப்பட்டது எப்படி? – தாயின் 18 மணி நேரப் பாசப்போராட்டம் – Vikatan

சென்னைச் செய்திகள்

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “குழந்தையைக் கடத்தியவர்கள், சஞ்சனாவுக்கு மூன்று நேரமும் பால் கொடுத்துள்ளனர். தாயின் அரவணைப்பு இல்லாத குழந்தை அழுதபடியே தூங்கியிருக்கிறது. போலீஸாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்ததால், வேறுவழியின்றி குழந்தையைக் கடத்தல் கும்பல் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் விட்டுவிட்டு சென்றிருக்கிறது. குழந்தை கடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும் இரண்டு கோணங்களில் விசாரணையைத் தொடங்கினோம். குழந்தையைக் கடத்தி அதை குழந்தை இல்லாதவர்களுக்கு விற்கும் கும்பலின் கைவரிசையாக இருக்கும் என்ற கோணத்தில் ஒரு போலீஸ் டீம் விசாரித்தது. இன்னொரு டீம், தமிழகம் முழுவதும் செயல்படும் குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களின் நெட்வொர்க்கை ரகசியமாகக் கண்காணித்தது.

கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

குழந்தை காணாமல்போன நேரத்திலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வெளியில் சென்ற வாகனங்களின் விவரங்களைச் சேகரித்து விசாரிக்கத் தொடங்கினோம். விசாரணையில் குழந்தையைக் கடத்திய கும்பல் குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அந்தக் கும்பலை போலீஸ் டீம் நெருங்கியபோதுதான், வேறுவழியின்றி குழந்தையை விட்டுவிட்டு அந்தக் கும்பல் தப்பியிருக்கிறது. விரைவில் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.

குழந்தைக் கடத்தப்பட்ட 18 மணி நேரத்துக்குள், அதை மீட்ட போலீஸ் டீமை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-rescued-kidnapped-3-month-old-child-in-18-hours