சென்னையில் பல இடங்களில் விடியவிடிய மழை- விமானங்கள் புறப்படுவதில் தாமதம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை நகரின் பல இடங்களில் விடியவிடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலையில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

image

சென்னையில் பரவலாக பெய்து வரும் மழை.. விமான போக்குவரத்து பாதிப்பு – வீடியோ

சென்னை நகரம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இரவு முதல் விடிய விடிய பல இடங்களில் கனமழை பெய்தது.

கிண்டி, போரூர், அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

image இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்தது- 11 நாளில் 10 லட்சம் பேருக்கு தொற்று உறுதி

சாலைகள் விழுந்த மரங்கள்

கனமழையால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகளில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் சூறை காற்று

இதனிடையே சென்னை விமானநிலையம் பகுதியில் இன்று அதிகாலை திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விமானநிலையத்தின் சா்வீஸ் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகாா்டுகள் காற்றில் பறந்தன.

துபாய் விமானம் தாமதம்

அப்போது சா்வதேச விமானநிலையத்திலிருந்து துபாய்க்கு சிறப்பு பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக்கொண்டிருந்தது. இதனால் அந்த விமானம் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்பு சுமாா் 30 நிமிடங்கள் தாமதமாக அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்றது.

ஹாங்காங் சரக்கு விமானம் தாமதம்

இதைப்போல் ஹாங்காங்கிற்கு செல்ல வேண்டிய லுப்தான்ஷா ஏா்லைன்ஸ் சரக்கு விமானமும் சுமாா் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. அந்த நேரத்தில் வேறு விமான சேவைகள் எதுவும் இல்லாததாலும், காற்று மழையும் சில நிமிடங்களில் ஓய்ந்துவிட்டதாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rainfall-in-party-of-chennai-city-403105.html