சென்னை: நாளை முதல் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் புறநகர் பகுதியில் உள்ள 52 ஏரிகள் நிரம்பியுள்ளன. சென்னை தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியும் நிரம்பும் நிலையில் இருப்பதால் அது திறந்துவிட்டால் 2015 வெள்ளம் போல் ஏற்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்துடன் மக்கள் உள்ளார்கள்.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், இந்த செயற்கைகோள் படத்தில் காட்டியுள்ளது போல் மஞ்சள் நிற புள்ளியானது சென்னைக்கு வெளிப்புறத்திலிருந்து நகரை நோக்கி நகர்கிறது.
இதனால் மழையின் அளவு நகரின் முக்கிய இடங்களில் தீவிரமாக இருக்கும். நாளை முதல் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும்.
செம்பரம்பாக்கம் ஏரி குறித்து அச்சமடைந்திருப்போர், ஊடகங்கள் கூறுவதை தவிர்த்துவிட்டு நிம்மதியாக இருங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
– பதிவு இலவசம்!
Source: https://tamil.oneindia.com/news/chennai/weatherman-says-that-rain-will-reduce-step-by-step-from-tomorrow-403322.html