சென்னை: `மொட்டைக் கடிதங்கள் மூலம் தொல்லை கொடுப்பேன்’ – மாமூல் கேட்ட விஜய் ரசிகர் கைது – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை அருகேயுள்ள, தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் அருணகிரி நாதர் தெருவில் பாலமுருகன் என்பவர் மளிகைக்கடை நடத்திவருகிறார். இவரின் கடைக்கு கடந்த 12-ம் தேதி வெள்ளை நிறச் சட்டை அணிந்த டிப்டாப் இளைஞர் ஒருவர் வந்தார். அவர், பாலமுருகனிடம் `நீங்கள் தீபாவளி பட்டாசுக் கடையை உரிமை இல்லாமல் நடத்திவருகிறீர்கள். அதனால் எனக்கு 40,000 ரூபாய் மாமூல் தர வேண்டும். இல்லையென்றால், மொட்டைக் கடிதத்தை வேறு வேறு பெயர்களில் எழுதி தொல்லை கொடுப்பேன். தொழில் செய்ய விட மாட்டேன்.

ரௌடிகள் எல்லோரையும் எனக்குத் தெரியும். எனக்கு எல்லா இடங்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் இந்தப் பிரச்னையை விட்டுவிடுகிறேன்’ என்று கூறி மிரட்டினார். இது தொடர்பாக பாலமுருகன், பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் 13-ம் தேதி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். கடை மற்றும் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-actor-vijay-fan