மழையா.. எங்கப்பா, வெயில் மண்டையை பிளக்குது.. சென்னை நிலவரம் இதுதான் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஒரு பக்கம் தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழக மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்தாலும் சென்னையில் வெயில் வறுத்து எடுத்து வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்தநிலையில் இன்று காலை முதலே வெயில் சுள்ளென்று சுட்டெரித்து வருகிறது. காலையிலேயே புழுக்கமாக இருப்பதாக சென்னை மக்கள் பலரும் தெரிவிக்கிறார்கள்.

சென்னையில் இன்று இரவு வாக்கில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அது 10 சதவீதம் என்ற அளவுக்கு தான் இருப்பதாகவும் சில தனியார் வானிலை ஆய்வு அமைப்புகள் கணித்துள்ளன.

இரண்டு நாட்களாக மழை சக்கை போடு போட்டு வந்த தூத்துக்குடியில் கூட இன்று வெயில் தலைகாட்டுகிறது. காலை 10:30 மணி நிலவரப்படி அங்கு 27 டிகிரி செல்சியஸ் வெயில் நிலவுகிறது.

அண்டை மாவட்டமான திருநெல்வேலி நகரில் இன்று காலை முதல் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. மதுரை, கோவை, சேலம் ஆகிய நகரங்களிலும் காலை முதல் வெயில் பளிச்சென்று வந்துவிட்டது.

இதுவரை பல நகரங்களிலும் மழைக்கான அறிகுறி தென்படவில்லை. மாலை அல்லது இரவு நேரங்களில் வானிலை மாறக் கூடும் என்பதுதான் பெரும்பாலான வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பாக இருக்கிறது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/hot-humidity-in-chennai-today-amid-rain-in-southern-tamilnadu-403408.html