சென்னை- கோவை வழித்தடத்தில் வரவேற்பை பெறாத அந்த ரயில்.. ரத்தாகிறது சேவை.. காரணம் என்ன? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை- கோவை வழித்தடத்தில் வரவேற்பை பெறாத அந்த ரயில்.. ரத்தாகிறது சேவை.. காரணம் என்ன?

image

பயணிகள் கூட்டமே இல்லை… சதாப்தி ரயில் சேவை ரத்து..!

சென்னை: சென்னை சென்டரல்- கோவை இடையேயான சதாப்தி சிறப்பு ரயில் சேவை டிசம்பர் 1ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால் சதாப்தி சிறப்பு ரயில் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில்., சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் இடையே இரு மார்க்கங்களிலும் வாரத்தில் 6 நாட்கள் சதாப்தி சிறப்பு ரயில் சேவை ( ரயில் எண் 06027.06028) இயக்கப்பட்டு வந்தது.

imageஎன்ன ஒரு கேடித்தனம்.. கேரள தம்பதி செய்த காரியம்.. அதிர்ந்த கோவை!

நவ 30ல் கடைசி

இந்த ரயிலுக்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் டிசம்பர் 1ம் தேதி முதுல் இந்த ரயில்சேவை நிறுத்தப்படுகிறது. நவம்பர் 30ம் தேதி இந்த ரயிலின் கடைசி சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சதாப்திக்கு வரவேற்பில்லை

பொதுவாக, கோவை- சென்னை இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சதாப்தி எக்ஸ்பிரஸ் மட்டுமே அதிக கட்டணம் வசூலிக்கப்படும் ரயில் ஆகும் அதனால் தான் மக்களிடம் அதிக வரவேற்பை பெறவில்லை.

குளுகுளு ரயில்

கோவையில் இருந்து தினமும் மதியம் 3.05 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில்நிலையங்களில் நின்று சென்னை சென்டிரலை இரவு 10.15 மணிக்கு சென்றடையும். முற்றிலும் ‘குளு குளு’ வசதி கொண்ட அந்த ரயிலில் கட்டணம் அதிகமாக இருந்ததால் மக்கள் பயணிக்க விரும்பவில்லை என்பதே காரணம்.

வரவேற்பு இல்லை

பேருந்தை கட்டணத்தை விடவும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை குறைந்து மக்கள் பயணிக்கும் வகையில் கட்டணம் வசூலித்தால் சதாப்தி எக்ஸ்பிரஸ் என்ன எத்தனை எக்ஸ்பிரஸ் விட்டாலும் கோவையில் வரவேற்பை பெறும் என்பதே அம்மக்களின் கோரிக்கையாகும். குளுகுளு வசதி, விரைவான பயணம் இதெல்லாம்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-coimbatore-shatabdi-express-cancelled-from-december-1st-due-to-not-welcome-people-403532.html