சென்னை.. ஓடும் சிட்டி பஸ்சை தடுத்து நிறுத்தி.. ஓவர் அட்ராசிட்டி.. தெறிக்க விட்ட ‘குடிமகன்’ – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஓடும் பஸ்சை கைகளால் தடுத்து நிறுத்தி அட்ராசிட்டி செய்துள்ளார் சென்னை ‘குடிமகன்’ ஒருவர்.

image

போதையில் பஸ்சை நிறுத்திய ‘கைப்புள்ள’.. உச்சகட்ட அட்டகாசம் – வீடியோ

சென்னை குரோம்பேட்டை காவல் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் ஒரு வாலிபர் போதையில் தள்ளாடி தள்ளாடி நடுரோட்டில் படுத்து புரண்டு கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அப்போது அந்த வழியாக மாநகர பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த குடிமகன் கொஞ்சம் கூட பயப்படாமல் அந்தப் பேருந்துக்கு எதிரே நெஞ்சை நிமிர்த்தி நின்றுகொண்டார்.

இதை பார்த்த பேருந்து ஓட்டுநர் பஸ் வேகத்தை குறைத்தார். அப்போது திடீரென பேருந்தின் முன் பகுதியை தனது இரண்டு கையாலும் பிடித்துக் கொண்டு அதை தள்ளுவது போல முக்கி முனகிக்கொண்டிருந்தார் அந்த குடிகார வாலிபர்.

“ஓடுகிற ரயிலை ஒத்த கையில் நிப்பாட்டியவன்” என்று மயில்சாமியிடம், சொல்லும் வடிவேலு டயலாக்கை நினைவுபடுத்துவது போல இருந்தது இந்த காட்சி.

imageகோவில்கள் எதிரில் உள்ள ‘கடவுளை கற்பித்தவன் முட்டாள்’ கல்வெட்டுகளை அகற்றாவிட்டால்.. பாஜக எச்சரிக்கை

அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் பசை அப்படியே நிறுத்தி விட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாக சுற்றிவருகிறது. ஓட்டுநர் ஒரு வினாடி தாமதித்து இருந்தாலும் பஸ் சக்கரத்தில் சிக்கி இருப்பார் அந்த குடிமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/a-drunkard-in-chennai-has-stopped-bus-403652.html