சென்னை தாம்பரத்தில் சோகம்.. வீட்டின் முன் விளையாடிய 3 வயது குழந்தை வாகனம் மோதி மரணம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூரில் டாடா ஏசி வாகனம் மோதியதில் 3வயது குழந்தை பரிதாபமாக உயிரிழ்ந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் மதுரகவியாழ்வார் தெருவில் வசிப்பவர் கார்த்திகேயன். கூலித்தொழிலாளி இவர் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை வீட்டுக்கு வெளியே நிறுத்தி இருந்தார்.

இவரது 3 வயதுடைய குழந்தை சிவலிங்கம் வெளியே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி நின்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக சிலிண்டர்களை ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனம் அங்கு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை உரசியதால் குழந்தை தடுமாறி கீழே விழுந்தான்.

இதில் குழந்தை படுகாயம் அடைந்தான். இதை பார்த்த டாட்டா ஏசி ஓட்டுநர் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில் அடிபட்ட குழந்தையை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அந்த குழந்தை இறந்து விட்டது என கூறியதால் அப்பகுதியில் பதற்றம் நீடித்தது.

இது சம்பந்தமாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்தை ஏறபடுத்திவிட்டு தப்பிய அந்த இளைஞர் பெயர் ரமேஷ் என்பதும் பெருங்களத்தூர் அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/a-3-year-old-child-tragically-killed-in-a-collision-with-a-tata-ac-vehicle-in-tambaram-403892.html