அடையாறு: கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்.. – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
  • Share this:
செம்பரம்பாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அதிக மழைப் பொழிவு ஏற்படும் காரணத்தால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று மத்திய நீர்வள ஆணையம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.  ஸ்ரீபெரும்புதூர் தாம்பரம் சென்னை பகுதிகளில் ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

[embedded content]

 மேலும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் அடையாற்றின் ஓரம் இருக்கும் விமான ஓடுபாதைகள் அருகே கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 12 மணி முதல் வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் பகுதிகளான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


First published: November 25, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-cyclone-nivar-people-on-both-sides-of-the-chennai-adyar-are-requested-to-go-to-safer-places-vai-373555.html