அதிதீவிர நிவர் புயல்- சென்னை விமான நிலையம் இரவு 7 மணி முதல் மூடல் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: வங்க கடலில் உருவான அதிதீவிர நிவர் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிதீவிர புயலாக மாறியுள்ள நிவர் புயலின் வெளிச்சுற்றுவட்ட பகுதி புதுவை- கடலூர் கடற்கரை பகுதியில் கரையை கடக்க தொடங்கி இருக்கிறது. தற்போது 15 கி.மீ வேகத்தில் இது கரையை கடந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் பயங்கர சப்தத்துடன் கூடிய காற்றும் கனமழையும் பெய்தது. மேலும் சென்னைக்கு அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடி உபரி நீர் அடயாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணிவரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் இரவு 7 மணி முதல் ரத்து செய்யப்படும் என்று விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னை மெட்ரோ ரயில் சேவைகளும் இரவு 7 மணியுடன் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/cyclone-nivar-chennai-airport-operations-to-suspend-from-7-pm-today-404141.html