சென்னையில் இன்று பகலில் 10 செ.மீ. நாளை காலைக்குள் மேலும் 10 செ.மீ மழைக்கு வாய்ப்பு-வெதர்மேன் கணிப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் இன்று பகலில் சுமார் 10 செ.மீ. மழை பெய்துள்ள நிலையில் நாளை காலைக்குள் மேலும் 10 செ.மீ. மழை பதிவாக வாய்ப்புள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நகரத் தொடங்கிய நிவர் புயல் 5 கி.மீ. வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது. இந்த புயலால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதாலும் மரங்கள் முறிந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கையில் நாளை சென்னை மற்றும் புறநகரில் அதிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் தூரத்தில் இருக்கும்போது பெய்யும் மழைக்கே சிரமமாக இருக்கிறது. நாளை புயல் கரையை கடக்கும்போது சென்னையில் அதிகனமழை பெய்தால் என்ன செய்வது என வேதனையில் உள்ளனர்.

imageஅசையாமல் நின்ற நிவர் நகர தொடங்கியது.. அதி தீவிர புயலானது.. 145 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசும்

இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

மற்றொரு போஸ்ட்டில் அவர் கூறுகையில் சென்னையில் எதிர்பார்ப்பை மீறி நல்ல மழை பெய்யும் நிலை இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி இதுவரை எந்த பகுதியிலும் அதிகமான மழை பெய்யவில்லை. நுங்கம்பாக்கத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 78 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

காலை 8.30 மணிக்கு மேல் தற்போதைய நிலவரப்படி மழையின் அளவு 78 மி.மீ.யிலிருந்து 100 மி.மீ ஆக இருந்தது. நாளை காலை நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 48 மணி நேர மழையின் அளவு 200 மில்லி மீட்டரை தாண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-weatherman-says-that-this-will-be-a-very-good-spell-for-chennai-and-ktc-404035.html