நிவருக்கு நடுவே.. காரை எடுத்துக்கொண்டு.. சாரை சாரையாக பாலங்களுக்கு போன சென்னை மக்கள்.. என்னாச்சு? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் தீவிரமாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் கார் வைத்திருக்கும் மக்கள் பலர் தங்கள் கார்களை பாலங்கள் மீது பார்க் செய்துள்ளனர்.

நிவர் புயல் காரணமாக சென்னையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவாகி இருக்கும் நிவர் புயல் தற்போது தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.

காரைக்காலில் இருந்து இந்த புயல் 90 கிமீ தூரத்தில் உள்ளது. காரைக்கால் கடல் பகுதிக்கு அருகே இந்த புயல் வந்துவிட்டது.

கடக்கும்

இந்த புயல் இன்று இரவே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது பெரிய அளவில் சேதங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மஹாபலிபுரம் – காரைக்கால் இடையே சென்னைக்கு அருகே புயல் கரையை கடக்க உள்ளது.

சென்னை மழை

இதனால் சென்னையில் கடுமையான மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து சென்னையில் தீவிர மழை பெய்து வருகிறது. இந்த புயல் காரணமாக தி நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், வடபழனி, அண்ணாசாலை, கோயம்பேடு, கிண்டி, கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மக்கள்

பலரின் வீடுகளுக்கு உள்ளே வெள்ளம் சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் மக்கள் இதனால் அடையாற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் பல இடங்களில் இதன் காரணமாக சாலைகள் நீரில் மூழ்கி உள்ளது. பலரின் கார், பைக்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருகிறது.

சென்னை

இந்தநிலையில் சென்னையில் தீவிரமாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் கார் வைத்திருக்கும் மக்கள் பலர் தங்கள் கார்களை பாலங்கள் மீது பார்க் செய்துள்ளனர்.வெள்ளம் வந்து தண்ணீரில் கார் மூழ்க கூடாது என்பதால் கார்களை பாலங்களுக்கு மேலே நிறுத்தி உள்ளனர். பாலங்களின் மேல் பகுதி வெள்ளம் வராது என்பதால் அங்கு வரை காரை நிறுத்தி உள்ளனர்.

பீதி

செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தவுடன் பீதி அடைந்த மக்கள் இப்படி கார்களை எடுத்துக் கொண்டு சென்று பாலங்கள் மேலே நிறுத்தி உள்ளனர். 2015ல் செம்பரம்பாக்கம் திறக்கப்பட்ட போது சென்னையில் பெரிய வெள்ளம் வந்தது. அப்போது மக்கள் பலர் தங்கள் கார், பைக்குகளை வெள்ளத்திற்கு பறிகொடுத்தனர்.

ஏற்படாது

ஆனால் 2015 வெள்ளம் போல இப்போது வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இல்லை. தமிழக அரசு இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துள்ளது. ஆனாலும் மக்கள் பலரும் கார்களை பாதுகாக்க இப்படி பாலங்களின் மேல் பார்க் செய்துள்ளனர்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/nivar-storm-chennai-people-parked-their-cars-on-fly-overs-to-keep-it-safe-404161.html