200 மி.மீ மழைக்கு வாய்ப்பு.. சென்னை- நாகப்பட்டினம் இடையே உச்சகட்ட மழை வெளுக்கும்.. 3 நாள் அலெர்ட்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவரம் அடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் மழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில் இன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால், பகுதிகளில் மிக கனமழை பெய்யும். இதேபோல் கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும்.

தீவிர புயல்

இன்று மாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறுகிறது நிவர். அதன்பின்னர் புயல் கரையை கடக்கும் போது வரை நாகப்பட்டினம் முதல் சென்னை வரை கடலோர பகுதிகளில் உச்சகட்ட அளவில் மிக கனமழை பெய்யும்.

எங்கெல்லாம் வாய்ப்பு

25ம் தேதி நிலவரப்படி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிக உச்சகட்ட மழை பெய்யும். இதேபோல் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மறறும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். இதேபோல் சேலம், நாமக்கல் ஈரோடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

உச்சகட்ட எச்சரிக்கை

26ம் தேதி நிலவரப்படி வேலூர், ராணிபபேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை முதல் நாகப்பட்டினம் வரை 25ம் தேதி 200 மில்லி மீட்டர் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

கனமழை பெய்யும்

அதேபோல் தஞ்சை திருவாருர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் 100 மில்லி மீட்டர் முதல் 200 மில்லிமீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ள பகுதிகளில் 60 முதல் 115 மில்லிமீட்டர் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/extremely-heavy-rainfall-is-likely-to-occur-nagapattinam-to-chennai-imd-alert-about-nivar-403949.html