வாவ்.. சென்னை பக்கிங்காம் கால்வாயில் அரிதான சிறிய சூறாவளி.. வீடியோ வெளியிட்ட வெதர்மேன் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை புறநகரில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் மிகச் சிறிய சூறாவளி உருவானதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நேற்று சென்னை புறநகர் பகுதியில் பக்கிங்காம் கால்வாயில் மிக அரிய சூறாவளி ஏற்பட்டது. அதன் தண்ணீர் சுழற்சியையும் மேகக் கூட்டங்களையும் பாருங்கள்.

எண்ணூரில் கடந்த 2017ஆம் ஆண்டு தண்ணீரில் இது போன்ற சூறாவளி ஏற்பட்டது. அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ளது என கூறி ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.

imageகரையை கடந்த நிவர்.. வேலூரில் 4 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை.. மக்கள் மகிழ்ச்சி

அபார்ட்மென்ட்

அந்த வீடியோவில் பழைய மகாபலிபுரம் சாலையில் ஹிராநந்தனி அபார்ட்மென்ட் அருகே செல்லும் பக்கிங்காம் கால்வாயில் வெள்ள நீர் நிரம்பியுள்ளது. இதில் நேற்று நீர் பீறிட்டு சிறிய சூறாவளி போல் சுழன்றது. ஒரு வித அழுத்தம் காரணமாக நீர் மேலெழும்பியது.

பாதிப்பு இல்லை

அப்போது மேகங்கள் இருள் சூழ்ந்தன. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு எண்ணூர் காசிமேட்டு கடற்கரையில் சிறிய சூறாவளி ஏற்பட்டது. இது வலுவிழந்த சூறாவளி என்பதால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

உயிரிழப்பு

இது போன்ற நீர் சூறாவளிகள் அரிதாக மிகவும் ஆபத்தானவை. இவை சாதாரணமாக நீர் நிலைகளில் தோன்றும். ஆனால் மிகவும் அரிதாக மோசமான பாதிப்பையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும். கடந்த 1555 ஆம் ஆண்டு மால்டா நீர் சூறாவளி மிக பெரும் அழிவை ஏற்படுத்தியதாக வரலாறு உண்டு.

ஏற்படுவது எப்படி?

இவை கடுமையான இடி, அதிக காற்று, அதிக புழுதி மின்னல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. பெரிய நீர் நிலைகளின் குறுக்கே ஈரப்பதமான காற்று நகரும் போது நீர் சூறாவளிகள் ஏற்படும். இவை 2 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும். 10 முதல் 15 நாட் வேகத்தில் நகர்ந்து செல்லும்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-weatherman-says-about-small-water-sprout-404252.html