சென்னை: மாடியில் தாய் கொலை – 2 நாள்கள் சகஜமாக வாழ்ந்த நீதிமன்ற ஊழியர்! – Vikatan

சென்னைச் செய்திகள்

வீட்டின் கீழ்தளத்தில் மகேஷ்குமாரும், மாடியில் உள்ள குடிசை வீட்டில் ஆதியம்மாளும் தங்கியிருந்தனர். நிவர் புயலால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தனர். இந்தச் சூழலில் கடந்த 2 நாள்களாக ஆதியம்மாள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. அதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது ஆதியம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கோயம்பேடு மார்க்கெட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆதியம்மாள், இறந்து கிடந்த நிலையில் மகேஷ்குமார், எதையும் கண்டுக்கொள்ளாமல் சகஜமாகவே இருந்திருக்கிறார்.

நீதித்துறை
representational image

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ஆதியம்மாளின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இரும்பு பைப்பால் தலையில் தாக்கப்பட்டு ஆதியம்மாள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “மனைவி, குழந்தைகள் பிரிந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்த மகேஷ்குமார், அடிக்கடி அவரின் அம்மா ஆதியம்மாளுடன் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் ஆதியம்மாளுக்கும் மகேஷ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதில் ஆத்திரமடைந்த மகேஷ்குமார், பெற்ற தாய் என்றுகூட பார்க்காமல் ஆதியம்மாளை தலையில் அடித்துவிட்டு கீழே இறங்கிவந்திருக்கிறார். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆதியம்மாள் இறந்துவிட்டார். அதனால் மகேஷ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrest-hc-employee-over-killing-of-his-mother