சென்னை: ஈசிஆர் பங்களா; ஆடம்பரமாக நடிக்க ஆடி கார்! – போலி பிசினஸ்மேன்கள் சிக்கியது எப்படி? – Vikatan

சென்னைச் செய்திகள்

மேலும், வாகனப் பதிவிலும் இவர்கள் நூதனமுறையில் மோசடி செய்திருக்கின்றனர். வாகனங்களைச் சட்டவிரோதமாக வாடகைக்கும் விட்டிருக்கின்றனர். வங்கியில் கொடுத்த செல்போன் நம்பர்கள், முகவரிகளைப் பலதடவை மாற்றியிருக்கின்றனர். வாகனக் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தாமல் இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாகியிருக்கின்றனர். இந்தக் கும்பல் 3.86 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிக்கு இழப்பீடு செய்திருக்கிறது. வங்கிகளில் பெற்ற வாகனக் கடன்கள் மூலம் ஆடி, பிஎம்டபுள்யூ போன்ற சொகுசு கார்களை வாங்கிப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். கைதான மூன்று பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்களை வங்கிகளிடம் ஒப்படைத்திருக்கிறோம்.

மோசடி
Representational Image

வங்கி மேலாளர்கள், வாகனக் கடன்களைக் கொடுக்கும்போது தனிக்கவனம் செலுத்துவதோடு ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு வழங்க வேண்டும்” என்றனர்.

வாகனக் கடன் மோசடியில் ஈடுபட்டவர்களைத் துரிதமாகச் செயல்பட்டுப் பிடித்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ- பிரபாகரன், தியாகராஜன், தலைமைக் காவலர்கள் ஸ்டாலின் ஜோஸ், ஜெகநாதன், குமார், முதன்மைக் காவலர் நிஷா, காவலர்கள் சுந்தர், கவியரசன் ஆகியோரை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-three-over-car-loan-fraud