`தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது!’- உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை – Vikatan

சென்னைச் செய்திகள்

நிகழ்ச்சியில் சமுதாயக் கூடம் மற்றும் சுவாமி விவேகானந்தர் திருவுருவச் சிலையை திறந்துவைத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர், “சுவாமி ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் மாபெரும் துறவிகள். மனதில் நல்ல எண்ணம், நோக்கம் இருந்தால் காரியங்களெல்லாம் நல்லதாகவே நடக்கும். முற்றும் துறந்த துறவியரான ராமகிருஷ்ணர், விவேகானந்தர் நூறாண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்திய ஓர் அமைப்பு, உலகம் முழுதும் பரவியிருப்பதற்கு, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீதிபதி புகழேந்தி
உ.பாண்டி

தற்போதைய இளைஞர்களிடையே ஒழுக்க நெறி குறைந்திருக்கிறது. ஆகவே, ஒழுக்கம், பண்பாட்டைக் காப்பதில் ராமகிருஷ்ண மடத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஒழுக்கமற்ற சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியால் பயனில்லை. பண்பாடு, ஞானம் ஆகியவை மூலம் உலகயே வென்று காட்டிய துறவிதான் சுவாமி விவேகானந்தர்.

Source: https://www.vikatan.com/government-and-politics/corruption/madras-hc-judge-speaks-about-corruption-in-tamilnadu