சென்னை: விஸ்வரூபம் எடுக்கும் வடசென்னை சிறுமி வழக்கு! – போக்ஸோ சட்டத்தில் நிருபர் கைது – Vikatan

சென்னைச் செய்திகள்

கோவளத்தைச் சேர்ந்த பெண்ணின் மகளுக்கு வயது 15. வடசென்னையில் உள்ள உறவினர் வீட்டில் சில மாதங்களுக்கு முன் அந்தச் சிறுமி தங்கியிருந்தார். சிறுமியின் உறவினர்கள் பாலியல் தொழில் புரோக்கர்களாக இருந்ததனர். அதனால் சிறுமியைக் கட்டாயப்படுத்தி ஒரு வார பேக்கேஜ் என்ற முறையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கின்றனர். இந்தத் தகவல் தெரிந்ததும் சிறுமியின் அம்மா, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இன்ஸ்பெக்டர் புகழேந்தி

அதன்பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷிணி மற்றும் போலீஸார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி சிறுமியின் சகோதரி உறவினர்கள் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மதன்குமார், அவரின் மனைவி பானு, மதன்குமாரின் அம்மா செல்வி, மதன்குமாரின் தங்கை சந்தியா, திருவொற்றியூரைச் சேர்ந்த மகேஷ்வரி (29), வனிதா (35), பூந்தமல்லியைச் சேர்ந்த விஜயா (45), புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக்கேயன் (25), ஆகிய 8 பேரை 11.11.2020-ல் போலீஸார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ராசேந்திரன் (46) என்பவர் கைது செய்யப்பட்டார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-child-abuse-case-private-tv-channel-reporter-arrested