தங்கம் விலை: தொடர்ச்சியான சரிவால் சென்னை மக்கள் ஹேப்பி! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் இன்று (நவம்பர் 30) காலையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,526 ஆக இருந்தது. இன்று மாலையில் அதன் விலை மேலும் இதன் விலை மேலும் 7 ரூபாய் குறைந்து ரூ.4,519க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, இன்று காலை 36,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று மாலை நேரத்தில் 40 ரூபாய் குறைந்து 36,152 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று மாலையில் கணிசமாகக் குறைந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) இன்று காலை ரூ.4,904லிருந்து ரூ.4,899 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல, 8 கிராம் தூய தங்கம் இன்று காலையில் 39,232 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், மாலையில் 40 ரூபாய் குறைந்து 39,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold rate in chennai: நகை வாங்க செம சான்ஸ்… உடனே கடைக்கு போங்க!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,725 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,501 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,501 ஆகவும், கேரளாவில் ரூ.4,506 ஆகவும், டெல்லியில் ரூ.4,716 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,982 ஆகவும், ஒசூரில் ரூ.4,575 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,575 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலை மாலை நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63.30 ஆகவே உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 63,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source: https://tamil.samayam.com/business/business-news/22ct-24ct-gold-silver-price-today-in-chennai-tamil-nadu-30th-november-2020-evening-update/articleshow/79492675.cms