அணி அணியாக வந்த பாமகவினர்.. சென்னை எல்லையிலேயே தடுத்து நிறுத்தும் போலீசார் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பாமகவினர் ஆங்காங்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் சென்னையிலுள்ள, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் சென்னை நோக்கி வந்த ஆயிரக்கணக்கான பாமக கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை, போலீசார் வழிமறித்து கைது செய்ய முயற்சித்தனர்.

இதனை கண்டித்து பாமக கட்சி தொண்டர்கள் சாலை மறியல் மற்றும் ரயில் மறியலில் ஈடுபட தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரமாக போராட்டம் தொடர்ந்ததால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

முன்னெச்சரிக்கையாக, சென்னையின் முக்கிய சாலைகளை போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

வேளச்சேரி முழுவதும் ஏராளமான வேளச்சேரி இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே வேலைக்கு செல்ல வாகனங்களில் சென்றவர்கள் நகர முடியவில்லை. அவர்கள் திரும்பிச் சென்று வேறு பாதை வழியாக பணியிடங்களுக்கு சென்றதை பார்க்க முடிந்தது.

“உரிமைக்காக போராட்டம்..” “நீண்ட கால போராட்டம்” “தமிழக அரசே, காவல்துறையே அனுமதி வழங்கு, அனுமதி வழங்கு” என்று அவர்கள் கோஷமிட்டனர்.

imageவன்னியருக்கு 20% இடஒதுக்கீடு போராட்டம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/pmk-cadres-stopped-to-enter-chennai-404642.html