மொத்தம் 400 பேராம்.. சிக்கிய 15 வயது சிறுமி.. அக்காதான் எல்லாத்துக்கும் காரணம்.. சென்னை ஷாக் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் 15 வயது பெண்ணை, 400 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் விஸ்வரூபமெடுக்கிறது.. இதோ இந்த போட்டோவில் இருக்கும் பெண்தான், பாதிக்கப்பட்ட பெண்ணை படுகுழியில் தள்ள மூல காரணம்.. இவர்தான் கைதாகி உள்ள அந்த சிறுமியின் அக்கா! இந்த வழக்கில், ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த பல பகீர் தகவல்கள் வெளியாகி வருவது மக்களை அதிர வைத்து வருகிறது.!

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் அந்த சிறுமி… இவரது அக்கா, அதாவது பெரியம்மா மகள் பெயர் ஷாகிதா பானு கர்ப்பமாக இருந்தார். அதனால், அவருக்கு உதவியாக அந்த வீட்டிற்கு சென்றார் சிறுமி.. ஆனால், ஷாகிதா பானுவும் அவரது கணவர் மதன்குமார், மதன்குமாரின் சகோதரி சந்தியா ஆகிய 3 பேரும் பணத்துக்காக ஆசைப்பட்டு, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர்.

இதுதொடர்பாக சிறுமியின் அம்மா, போலீசில் புகார் தரவும், ஷாகிதா பானு உள்ளிட்ட 8 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், ரயில்வே ஊழியர் காமேஸ்வரன் என லிஸ்ட் வெளியே வந்தது.

பாலியல் தொழில்

இவர்களையும் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்… சிறுமியை தினமும் பாலியல் தொழிலில் இவர்கள் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்கள்.. முக்கியமாக அரசியல் பிரமுகர்களுக்குதான் சிறுமி அதிக முறை விலை பேசப்பட்டிருக்கிறாள். இது சம்பந்தமான விசாரணையை போலீசார் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.. அந்த வகையில் தற்போது மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளி மாநில பெண்கள்

தங்கையை பாலியல் தொழிலில் தள்ளுவதற்கு முன்பு, கணவன் மதன்குமாருடன் சேர்ந்து வெளி மாநில பெண்களையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த ஆரம்பித்துள்ளார் ஷாகிதா பானு. இந்த பெண்களை மாத வாடகைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.. இதற்கு பிறகுதான் தன் தங்கையையும் பாலியல் தொழிலில் தள்ளி உள்ளனர். பிறகு பணம் எதிர்பாராத வகையில் இவர்களுக்கு கொட்ட ஆரம்பித்துள்ளது.

வட்டிக்கு பணம்

அதேபோல, சிறுமியின் அக்காவுக்கு போலீஸ்காரர் புகழேந்தி வட்டிப்பணம் தந்தாராம்.. அந்த வட்டி பணத்திற்காக சிறுமியை அவர் நாசம் செய்துள்ளது தெரியவந்தது.. மேலும், யாரெல்லாம் தன்னை பலாத்காரம் செய்தார்கள் என்று சிறுமியிடம் ஒவ்வொருவரின் போட்டோவையும் காட்டி போலீசார் கேட்டபோது, வினோபாஜி என்பவரைதான முதல் குற்றவாளியாக காட்டினாராம் சிறுமி… ஏகப்பட்ட சேட்டையை இவர்தான் செய்திருக்கிறார்.. இந்த வினோபாஜி என்பவர் ஒரு டிவி செய்தியாளர்.. ரிப்போர்ட்டராக பார்ட் டைம் வேலை பார்த்தாலும், முக்கிய தொழில் வட்டிக்கு பணம் விடுவதுதான்

விசாரணை

இதையடுத்து, அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.. அதில் மேலும் பல திடுக் தகவல்கள் வெளியாகின.. எண்ணூர் சுற்றுவட்டார பகதியில் இதுபோல 50-க்கும் மேற்பட்ட பாலியல் தொழில் செய்யும் கும்பல் இருக்கிறதாம்.. இந்த கும்பல்களுக்கு எல்லாம் பைனான்ஸ் தந்து வந்ததே இதே வினோபாஜிதான் என்பது தெரியவந்தது.

வினோபாஜி

இந்த விஷயம் வெடித்து கிளம்பியதுஎப்படி என்ற தகவலும் வெளியாகி உள்ளது.. கணவன் மனைவிக்கு பணம் அளவுக்கு அதிகமாக வர ஆரம்பித்ததும், பணத்தை பிரிப்பதில் தகராறு வெடித்துள்ளது.. அதனால், மனைவியின் தங்கையை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதுபோலவே தன்னுடைய தங்கை சந்தியாவுடன் சேர்ந்து தனியாக தொழில் தொடங்கினாரம் மதன்குமார்.. இதனால் மேலும் பிரச்சனை வெடித்து கிளம்பியது.. சிறுமியின் அக்காவும், வினோபாஜியும் ஒரே கூட்டு என்பதால், போலீசில் போட்டு தந்துள்ளார் மதன்குமார். அதாவது இது முழுக்க முழுக்க தொழில் போட்டியால் வந்த விவகாரமே இது!

அக்கா

இதுசம்பந்தமாக மகளிர் போலீசார், சிறுமியின் அக்காவை விசாரிக்க சென்றபோதுதான், சிறுமி அங்கே உடம்பு சரியில்லாமல் சுருண்டு விழுந்ததை கண்டு போலீசார் மிரண்டே போய்விட்டனர்.. அதற்கு பிறகு சிறுமியிடம் விசாரிக்க போய்தான், தன்னை பலாத்காரம் செய்த ஒவ்வொரு விஷயத்தையும் கண்ணீருடன் சொல்ல ஆரம்பித்துள்ளார். இது மதன்குமாரே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஆகும்.. யாரையோ பழிவாங்க போலீசில் புகார் தர போய் இன்று மொத்த கும்பலுமே சிக்கி கொண்டுள்ளது.

லிஸ்ட்

இவர்கள் எல்லாரையும் பிடித்து விசாரிக்கும்போதுதான், டாக்டர்கள், முன்னாள் டிஎஸ்பிக்கள், உள்ளூர் அரசியல் பிமுகர்கள் இன்ஸ்பெக்டர்கள் என 50 பேர் லிஸ்ட் தயாராகி உள்ளது.. மொத்த பேரையும் போலீசார் கைது செய்ய போகிறார்கள்.. அந்த விஷயத்தில் சென்னை போலீசார் மிகுந்த வீர்யத்துடன் இருக்கிறார்கள்.. தவறு செய்தவர்கள் ஒருத்தரையுமே விட போவதில்லை என்ற உறுதியில் சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உறுதியாக இருப்பது மக்களிடம் வரவேற்பை பெற்று வருவதுடன், புது நம்பிக்கையையும் தந்து வருகிறது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-washermenpet-15-year-old-minor-girl-harassment-case-issue-404718.html