சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலைக்கொண்டுள்ளது. இதுஅடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே இடத்தில் நீடிக்கும் என்று கூறியது.

மேலும் இதன் காரணமாக ராமநாதபுரம், மதுரை., விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும். மேலும் சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமா மழை பெய்யக்கூடும்.

imageகாற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் – 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப்பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழையும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. இதன்படியே இன்று அதிகாலை சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-imd-forcast-heavy-rains-with-thunder-and-lightning-in-13-districts-in-tamil-nadu-405079.html