அம்மா ஸ்கூட்டர் வேணுமா.. சென்னை பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை மகளிருக்கான அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு அவர்கள் புதிதாக வாங்கும் மகளிருக்கான இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

என்ன தேவை

வயது, முகவரி, ஓட்டுநர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளுடன் விண்ணப்பிக்கும் பயனாளிகளை சம்பந்தப்பட்ட துணையர் ( வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு) மற்றும் மாவட்ட அளவிலான பரிசீலனைக்குழு ஆய்வு செய்து தகுதியுள்ள பயனாளிகளுக்கு மானியம் விடுவிக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் அந்தந்த மண்ட அலுவலகங்களில், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வயது, முகவரி, ஓட்டுநர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

பெண்கள்

சென்னை மாநகராட்சியில் நகர்புறங்களில் பணிபுரியும் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள, தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.25000க்கு உட்பட்ட பெண்கள் மானிய ஸகூட்டர் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

முன்னுரிமை யாருக்கு

ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 35 வயதுக்கும் மேற்பட்ட திருமணமாக மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மகளிர், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்” இவ்வாறு கூறியுள்ளார்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/amma-scooter-scheme-last-date-2020-21-how-to-apply-who-eligible-details-405370.html