பாலின பாகுபாடு ஒடுக்குமுறையில் சினிமா, மீடியா தாக்கம்.. சென்னை அமெரிக்க துணை தூதரகத்தில் கருத்தரங்கு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: யுனைடெட் ஸ்டேட்ஸ்-இந்தியா கல்வி அறக்கட்டளை (யு.எஸ்.ஐ.இ.எஃப்) மற்றும் டிஜிட்டல் செய்தி தளமான தி நியூஸ் மினிட் ஆகியவற்றுடன் இணைந்து சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் “ரீல் அண்ட் ரியல்: பாலின பாகுபாடு வன்முறையில், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் தாக்கம்” ​என்ற தலைப்பில் ஒரு வீடியோ மூலமான (மெய்நிகர்) குழு விவாதத்தை நடத்தியது.

உலகெங்கிலும் உள்ள மூன்றில் ஒருவரு பெண்களையாவது பாதிக்கும், இந்த பாலின அடிப்படையிலான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மக்களுக்கு உணர்த்துவதற்கும் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் முக்கிய பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. இது பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இணைப்பு

இந்த வீடியோ கான்பரன்ஸில், கேரளாவைச் சேர்ந்த, விருது வென்ற திரைப்பட இயக்குநர், மகேஷ் நாராயணன், டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர். அரவிந்த் சிங்கால், தி நியூஸ் மினிட் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன், அமெரிக்க துணை தூதரக கலாச்சார விவகாரத் துறை அதிகாரி மவுலிக் பெர்கானா ஆகியோர் பங்கேற்றனர்.

மவுலிக் பெர்கானா கூறுகையில், “பாலின அடிப்படையிலான வன்முறை நாடு பாகுபாடு இல்லாமல் எல்லா இடத்திலும் மற்றும் வீடுகளின் நான்கு சுவர்களுக்குள்ளும், பொது இடங்களிலும், பணியிடங்களிலும், மற்றும் ஆன்லைன் உலகிலும் நடைபெறுகிறது. இந்த முக்கியமான பிரச்சினை குறித்து கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் சென்னையில் உள்ள யு.எஸ். துணைத் தூதரகம் மகிழ்ச்சியடைகிறது. ” என்றார்.

“பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாடு” ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர சர்வதேச பிரச்சாரமாகும். நவம்பர் 25 அன்று தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இக் கருத்தரங்கு நடைபெற்றது.

இணைப்பு

Source: https://tamil.oneindia.com/art-culture/essays/media-and-entertainment-are-important-tools-to-sensitize-public-on-gender-based-violence-405426.html