சென்னை ஆலந்தூர் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
ஆலந்தூர் சாலையில் திடீர் பள்ளம்

  • Share this:
சென்னை கிண்டி அடுத்த ஆலந்தூர் ராம் நகரில் இருந்து வானுவாம்பேட்டை இணைக்கும் பிரதான சாலை பரத் மருத்துவமனை அருகே கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரெவி புயலால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னயைில் பல இடங்களில் கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகள் முதல் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

மழை காலங்களில் சென்னையின் சாலைகள் உரிய பராமாரிப்பு இல்லாத காரணத்தால் குண்டும் குழியுமாக மாறியது. இதனால் சாலை கண்ணுக்கே தெரியாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். சாலைகளின் பல இடங்களில் பள்ளங்களானது. சென்னை கோடம்பாக்கத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் டிரைவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் சென்னை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் லந்தூர் ராம் நகரில் இருந்து வானுவாம்பேட்டை இணைக்கும் பிரதான சாலையிவ் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் உடனடியாக ஆலந்தூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அந்த சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலையில் யாரும் செல்லாத வகையில் மூடப்பட்டு உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


First published: December 9, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-alandur-was-suddenly-due-to-a-large-dent-in-the-road-vjr-378897.html