சென்னை டூ திருப்பதி பயண நேரம் குறைகிறது?! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் – ரேணிகுண்டாவுக்கு இடையே ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் தடங்கள் வழியாக ரேணிகுண்டா வரை இச்சோதனை ஓட்டம் இன்று மதியம் நடத்தப்படவுள்ளது.

24 நவீன பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயிலை கொண்டு, 130 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஏரியாவுல எல்லாம் செவ்வாய்க்கிழமை பவட் கட்!

இந்தச் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தால், சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு செல்வதற்கான பயண நேரம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/travel-time-will-be-reduced-drastically-to-tirupati-from-chennai-central/articleshow/79691633.cms