இன்னும் இரண்டு மாதத்திற்கு பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

  • News18
  • Last Updated:
    December 12, 2020, 6:35 AM IST
  • Share this:
இன்னும் இரண்டு மாத காலத்திற்கு தொடர்ந்து பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னை மாநகராட்சி சார்பில் குடிசைபகுதிகளில் 1கோடியே 5 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. வழக்கத்தைவிட சென்னையில் 60சதவிகிதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது. கடந்த காலங்களைவிட மழைநீர் தேங்குவது சென்னையில் குறைக்கப்பட்டுள்ளது.

21 மழை நீர் தேங்கும் இடங்கள் சென்னையில் சவாலாக உள்ளது அங்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி, செம்மஞ்சேரி,செம்பரபாக்கம் பகுதிகள் மாநகராட்சிக்கு சவாலாக விளங்கியது. இந்த பகுதிகளில் ஒன்றரை டி.எம்.சி அளவு அன்மையில் பெய்த மழையின் போது நீர் தேங்கியது.

புதிதாக பள்ளிக்கரணை பகுதியில் 5 கால்வாய்கள் கட்டமைப்படுகின்றது. 5 கால்வாய்கள் அமைக்க 340கோடி அளவு செலவு பிடிக்கும் இதன் பிறகு தென்சென்னை பகுதியில் மழை நீர் தேங்குவது நிரந்தரமாக தடுக்கப்படும். கொரோனோவை பொருத்தவரை ஜூன் 19 முதல் 3மடங்கு சோதனை அதிகரிக்கப்பட்டது.

Also read… இறுதியாண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு ஏப்ரல் வரை ஆன்லைன் வகுப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

இன்றைய தேதியில் நாளொன்றுக்கு 10ஆயிரம் சோதனைகள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 25லட்சம் கொரோனா சோதனைகள் என்ற இலக்கை சென்னை மாநகராட்சி அடைய இருக்கிறது.கொரோனா தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு வழங்க பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாத காலத்திற்கு மாஸ்க் கட்டாயம் பொதுமக்கள் அணியவேண்டும் என்றும் பிரகாஷ் தெரிவித்தார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்


First published: December 12, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/corporation-commissioner-prakash-has-said-that-the-public-should-wear-the-mask-for-another-two-months-vin-379691.html