சென்னை மின்சார ரயில்களில் அனைத்து பெண்களும் நாளை முதல் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்கலாம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் ஓடும் புறநகா் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களும், 12 வயதுக்குட்ட குழந்தைகளும் நேரக்கட்டுப்பாடு இன்றி நாளை (டிசம்பர் 14முதல்) பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்ட மின்சார ரயில் சேவைகள்பல்வேறு தளா்வுகளுக்குப் பிறகு, படிப்படியாக இயங்க தொடங்கி உள்ளன. புறநகா் மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்ட போதிலும்,அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அரசு மற்றும் தனியார்நிறுவன ஊழியா்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், அத்தியாவசியப் பட்டியலின் கீழ் வராத பெண்களும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நேரக் கட்டுப்பாடுகளுடன் மின்சார ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அவா்களுக்கு டிக்கெட் கவுன்ட்டா்களில் டிக்கெட்டுகளும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் 14ம் தேதி முதல்( நாளை முதல்) புறநகா் மின்சார ரயில்களில் அத்தியாவசியப் பட்டியலின் கீழ் வராத பெண்களும், 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளும் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

imageசென்னையில் புறநகர் ரயில் சேவையை முழுமையாக தொடங்க சிபிஎம் வலியுறுத்தல்

இதனிடையே சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூா் வழியாக அரக்கோணத்துக்கு சுற்றுவட்டப்பாதை ரயில் சேவையும் நாளை முதல் (டிசம்பா் 14-ஆம் தேதி) மீண்டும் தொடங்குகிறது. சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயில் புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரையை மீண்டும் அடையும். மற்றொரு ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் வழியாக திருமால்பூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரையை அடையும்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/all-women-and-children-allowed-to-travel-on-chennai-suburban-electric-trains-without-any-time-limit-405690.html