சென்னை ஆவடி அருகே விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து பொதுமக்களால் தீ வைத்து எரிப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையை அடுத்த ஆவடி அமுதூர்மேட்டில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை பொதுமக்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அமுதூர்மேட்டில் கார்த்திக் (வயது 42) என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பேருந்து ஒன்று கார்த்திக் மீது மோதியது.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை பொதுமக்கள் முதலில் தாக்கினர்.

imageரீவைண்ட் 2020.. வாசலில் மஞ்சள் தண்ணீரை தெளித்த இளம்பெண் முதல் 100 வயசு பாட்டி வரை.. காஞ்சி டாப் 10

பின்னர் திடீரென தீ வைத்தும் எரித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/angry-mob-sets-bus-on-fire-after-road-accident-near-chennai-405834.html