சென்னை ஐ.ஐ.டி.யில் 183 பேருக்கு கரோனா! – நக்கீரன்

சென்னைச் செய்திகள்

 

 

சென்னை ஐ.ஐ.டி.யில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. 

 

நேற்று (14/12/2020) வரை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் உட்பட 104 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மேலும் 79 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. டிசம்பர் 1- ஆம் தேதி இரண்டு பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இரண்டே வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 200-ஐ நெருங்கியுள்ளது. 

 

உரிய விதிமுறைகளைப் பின்பற்றாததால் கரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது சென்னை ஐ.ஐ.டி.

 

 

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-iit-coronavirus-students-and-staffs-hospital