சென்னை: மனைவியின் சிகிச்சைக்கு சேமித்த பணம் – காவலாளியின் ரூ.4.70 லட்சத்தை மீட்டுக்கொடுத்த போலீஸ்! – Vikatan

சென்னைச் செய்திகள்

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து 4 லட்சத்து 70 ஆயிரம், தங்கநகைகளை பறிமுதல் செய்தனர். மனைவியின் மருத்துவச் செலவுக்காக சேமித்து வைத்திருந்த பணம், நகைகள் திரும்பக் கிடைத்த தகவல் ஷபிலாலுக்கு போலீஸாருக்கு தெரிவித்தனர். அதைக்கேட்டு அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பிறகு காவல் நிலையத்துக்குச் சென்று பணம், நகைளை கிடைக்க நடவடிக்கை எடுத்த போலீஸாருக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார். சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு ஷபிலாலிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஷபிலாலின் சோகக்கதையைக் கேட்ட காவல்துறை அதிகாரிகள், இந்தத் திருட்டு வழக்கை திறம்பட விசாரித்து நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீஸாருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

கைது
representational image

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், “கடந்த 6 மாதங்களாக திருமங்கலம்,அண்ணா நகர், திரு.வி.க நகர், திருமுல்லைவாயில், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் திறந்திருக்கும் வீடுகளை விக்னேஷ் நோட்டமிடுவார். பிறகு அந்த வீட்டுக்குள் நுழைந்து செல்போன், பணம், நகைகளைக் கொள்ளையடிப்பார். அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார். ஷபிலாலின் வீட்டுக்குள் நுழைந்து செல்போனைத் திருட விக்னேஷ் அதைத் தேடியிருக்கிறார். அப்போதுதான் பணம் வைத்திருந்த துணி, அவரின் கையில் சிக்கியிருக்கிறது. `செல்போன் திருட வந்த இடத்தில் இவ்வளவு பணமா?’ என அதைத் திருடிக் கொண்டு நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்றிருக்கிறார் விக்னேஷ். அங்கு விருந்து, மது என பணத்தை விக்னேஷ் செலவழித்திருக்கிறார். அதன்பிறகு சென்னை திரும்பிய சமயத்தில்தான் வாகனச் சோதனையில் சிக்கிக் கொண்டார்” என்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-youth-over-theft-and-recover-47-lakh-rupees