பிரேத பரிசோதனை முடிந்து இருவரின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சந்தேக மரணம் என்ற பிரிவின்கீழ் கோட்டூர்புரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கீதா கிருஷ்ணன், மானஷாவைக் கண்டுபிடித்துத் தரும்படி கல்பனாவின் சகோதரி ரேணுகாதேவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் இருவரையும் தேடிவந்தனர். கீதா கிருஷ்ணனின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
கல்பனாவின் சகோதரி ரேணுகாதேவி கொடுத்த புகாரில், “என்னுடைய கணவரின் தம்பியான கீதா கிருஷ்ணனைக் காதலித்து கல்பனா திருமணம் செய்துகொண்டார். வேலைக்குச் செல்லாத கிருஷ்ணன், எங்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருந்தார். என் தங்கைக்காகவும், அவரின் குழந்தைகளுக்காகவும் சொத்தை விற்றுக்கூட பணம் கொடுத்தேன். இருப்பினும், என் தங்கையையும் குழந்தைகளையும் கீதா கிருஷ்ணன் கவனிக்கவில்லை. 2-ம் தேதி முதல் காணாமல்போன குழந்தை மானஷா, கீதா கிருஷ்ணனைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கீதா கிருஷ்ணன், திருப்பதியிலிருந்து சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்குக் குழந்தையுடன் வரும் ரகசியத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் கீதா கிருஷ்ணனைப் பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் கூறுகையில், “கீதா கிருஷ்ணனுக்குக் கடன் தொல்லை இருந்துவந்தது. அது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-lady-professor-suicide-and-her-daughter-murdered-police-arrests-husband