சென்னை விப்ரோவில் நல்ல சம்பளத்தில் வேலை.. ஜாவா, லினக்ஸ் தெரிந்தால் போதும்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை விப்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகியுள்ளது.

விப்ரோ லிமிடெட் என்பது இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். இது தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் வணிக செயல்முறை சேவைகளை வழங்கி வருகிறது. இங்கு பணிபுரிய ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Service now Custom Application Development- Developer, Linux Admin- Administrator, Enterprise Platform Engineering Java- Developer, Business Analysis- Business Analyst உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுவை மின்வாரியத்தில் ஜேஇ பணி.. ரூ.33 ஆயிரம் சம்பளம்.. மொத்தம் 42 வேகன்சி.. ஆன்லைனில் அப்ளை செய்ங்க

எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். எழுத்துத் தேர்வு, டெக்னிக்கல் தேர்வு மற்றும் எச்ஆர் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள விப்ரோ லிமிடெட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.

இதற்காக இளநிலை அல்லது முதுநிலை பட்டம் அல்லது என்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கான விவரங்களை careers.wipro.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.

Source: https://tamil.oneindia.com/jobs/chennai-wipro-limited-calls-for-developer-business-analyst-posts-405930.html