100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று, ஹாஸ்டலில் க்வாரன்டீன்… சென்னை ஐ.ஐ.டி நிலவரம் என்ன? – Vikatan

சென்னைச் செய்திகள்

இந்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் சிலரை தொடர்புகொண்டு பேசினோம். “சில நாள்களுக்கு முன்பு ஒரு ஹாஸ்டலில் மட்டும் நிறைய பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நிறைய பேருக்கு `பாசிட்டிவ்’ என ரிசல்ட் வந்தது. அதனையடுத்துதான் பரிசோதனைகளை அதிகப்படுத்தினர். அதன்பிறகுதான் நிறைய விடுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதே தெரியவந்தது.

ஆரம்பத்தில் குறைவான மாணவர்கள்தான் இருந்தோம். விடுதியில் எல்லோருக்கும் தனித்தனி அறைகள் கொடுக்கப்பட்டன. தனித்தனி கழிவறைகளைத்தான் பயன்படுத்தினோம். எல்லோரும் கவனமுடன்தான் இருந்தோம். மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபோது தனித்தனி அறையோ கழிவறையோ சாத்தியமில்லாமல் போனது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே தனி கழிவறை கொடுக்கக் கூடிய சூழல்.

Representational Image
AP Photo / Rafiq Maqbool

இன்னொரு பக்கம் ஒரே ஒரு மெஸ் மட்டுமே செயல்பட்டது. எனவே மாணவர்கள் எல்லோரும் அங்கு சேர்ந்து சென்று வர வேண்டிய சூழல். அதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாரும் ஐ.ஐ.டிக்குள் நுழைய கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால், அண்மையில் `புராஜெக்ட் ஸ்டாஃப்ஸ்’ நிறைய பேர் வெளியில் இருந்து வந்து சென்றார்கள். எனவே இப்படியான சூழலில் எப்படி யார் மூலம் இந்தளவுக்கு கொரோனா பரவியது என்று தெரியவில்லை.

ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட சிலரைத் தவிர, மற்றவர்களுக்கெல்லாம் அறிகுறியில்லா (Asymptomatic) தொற்றுதான் என்பதால் விடுதிகளில் எந்தவிதமான பீதியும் இல்லை. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வெளியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் ஹாஸ்டலிலேயே க்வாரன்டீன் செய்யப்பட்டிருக்கிறோம். வெளியிலிருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதும் இல்லை. உள்ளிருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. எங்களது அறைக்கே உணவு கொண்டு வந்து கொடுத்துவிடுகிறார்கள். எங்களிடையே பதற்றமோ பீதியோ இல்லை” என்றனர்.

Source: https://www.vikatan.com/health/news/over-100-covid-19-positive-cases-in-iit-madras-what-happened-in-the-campus