சென்னை: `ஒருதலைக் காதல்’ – சீரியல் நடிகைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இயக்குநர் கைது – Vikatan

சென்னைச் செய்திகள்

இந்தச் சமயத்தில் ரிசார்ட்டில் நடந்த படப்பிடிப்பின்போது ரஞ்சித், கதாநாயகியிடம் தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இயக்குநர் ரஞ்சித்தோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், கதாநாயகியை ஷூட்டிங் ஸ்பாட்டில்வைத்தே தாக்கியதோடு, பாலியல்ரீதியாகவும் தொல்லை கொடுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த கதாநாயகி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

கைது
representational image

அதன்பேரில் ரஞ்சித்திடம் விசாரித்தபோதுதான் இந்தத் தகவல்கள் தெரியவந்தன. இதையடுத்து ரஞ்சித்தைக் கைதுசெய்து கொரோனா பரிசோதனைக்குப் பிறகு அவரைச் சிறையில் அடைத்திருக்கிறோம். ரஞ்சித் மீது 294b, 323, பெண்கள் வன்கொடுமைச் சட்டம் ஆகிய மூன்று பிரிவீன் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்” என்றனர்.

சீரியலில் நடித்த கதாநாயகிக்கு இயக்குநர் ரஞ்சித் கொடுத்த டார்ச்சர் தொடர்பான ஆதாரங்கள் அவரின் செல்போனில் இருந்திருக்கின்றன. அந்த செல்போனில்தான் கதாநாயகியின் பெயரை ரஞ்சித் தன் கையில் பச்சைகுத்திய புகைப்படங்களும் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அந்த ஆதாரங்கள் போலீஸாரிடம் சிக்கிக்கொள்ளாமலிருக்க, ரஞ்சித் செல்போனை தூக்கி எறிந்து உடைத்திருக்கிறார். தற்போது அந்த போனிலிருக்கும் ஆதாரங்களை போலீஸார் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

நடிகை சித்ரா வழக்கு சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஷூட்டிங்கிலேயே வெப் சீரியல் கதாநாயகிக்கு இயக்குநரால் ஏற்பட்ட தொல்லை, சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-web-serial-director