சென்னை: மனைவி மீது சந்தேகம்; தவிக்கும் குழந்தைகள்! – தாயின் கண்முன்னே மகளுக்கு நேர்ந்த கொடூரம் – Vikatan

சென்னைச் செய்திகள்

அதனால் நான் வீட்டை விட்டு வெளியில் வந்தேன். நான் வீட்டுக்குச் சென்று விட்டதாகக் கருதிய ஹரி, மீண்டும் கோமதியிடம் தகராறில் ஈடுபட்டார். திடீரென வீட்டுக்குள் இருந்து என் மகள் கோமதியின் அலறல் சத்தம் கேட்டடது. உடனே நான் ஓடிபோய் பார்த்தபோது ஹரி, கோமதியை தரையில் படுக்க வைத்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டிருந்தான். நான் அய்யோ எனது மகளை கொல்ல பார்க்கிறான் யாராவது காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டேன். அதைக் கேட்டதும் கத்தியோடு வந்த ஹரி, என்னை தள்ளிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.

நான் கோமதி அருகில் சென்று பார்த்தபோது அவளின் இடதுபக்க கழுத்து, இடது கை மணிகட்டு ஆகிய இடங்களில் ரத்த காயங்கள் ஏற்பட்டு அதிகளவில் ரத்தம் வெளியேறியது. பின்னர் உறவினர் ஒருவர் மூலம் கோமதியை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அங்கு அவள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனது மகள் கோமதியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து மருமகன் ஹரி மீது நடவடிக்கை ஏடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மனைவி மீதான சந்தேகத்தால் அவரைக் கொலை செய்த வழக்கில் ஹரி சிறைக்குச் சென்றுவிட்டார். தற்போது இரண்டு குழந்தைகளும் அம்மா, அப்பா இல்லாமல் தவித்துவருகின்றனர். இரண்டு குழந்தைகளையும் கோமதியின் அம்மா வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

இந்தச் சம்பவம் நீலாங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-electrician-murdered-his-wife-in-family-issue