சென்னை: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்! – மிக்ஸி விற்க வந்த வடமாநில இளைஞரால் நேர்ந்த கொடுமை – Vikatan

சென்னைச் செய்திகள்

அதோடு முகமது ஆரீப், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன் பிறகு கிரிஜா, எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் முகமது ஆரீப் மீது பாலியல் வன்கொடுமை (376 ஐபிசி) சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், “முகமது ஆரீப், உத்தரப்பிரதேச மாநிலம், முசாபூர் நகரைச் சேர்ந்தவர். சென்னையில் தங்கி மிக்ஸி பிசினஸ் செய்துவந்திருக்கிறார். வியாசர்பாடியில் மிக்ஸி விற்க சென்றபோது கிரிஜாவைப் பார்த்திருக்கிறார்.

கைது
Representational Image

அப்போது இருவரும் இந்தியில் பேசியிருக்கின்றனர். கிரிஜாவிடம் மிக்ஸி விற்பதைப்போல பேச்சுக் கொடுத்த முகமது ஆரீப் வீட்டில் யாரும் இல்லை என்பதை கிரிஜா மூலம் தெரிந்துகொண்டார். பின்னர்தான் அவர், கிரிஜாவிடம் தவறாக நடந்திருக்கிறார். கிரிஜா அளித்த தகவலின்படி முகமது ஆரீப்பை கைதுசெய்திருக்கிறோம். கிரிஜாவுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்திருக்கிறது. அதனால் அவரின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு கிரிஜா தொடர்பான விவரங்களை வெளியில் சொல்லவில்லை “என்றனர்.

மிக்ஸி விற்க தெருத் தெருவாக செல்லும் முகமது ஆரீப், வீட்டில் தனியாக இருந்த கிரிஜாவிடம் தவறாக நடந்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-north-indian-youth-over-rape-case