சென்னை: விருப்பமில்லாத திருமணம்; விபரீத முடிவை எடுத்த இளம்பெண்! -வீடியோவால் வெளியான கசப்பான சம்பவம் – Vikatan

சென்னைச் செய்திகள்

இப்போ கூட உங்கள எல்லாம் பாக்கணும்ன்னு தோணுது. பாப்பாவையும் தம்பியையும் நல்லா பார்த்துக்கோங்க. தம்பிக்கு நிறைய விஷயம் பிடிக்கும். ஆனா அத உங்கிட்ட சொல்ல பயப்படுவான். தம்பி எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும். நான் ரொம்பவே மிஸ் பண்ணிட்டுதான் இருக்கேன். இவங்களை ஏத்துக்கவ தோண மாட்டுக்குது எனக்கு கஷடமா இருக்குது… கத்தி அழ கூட முடியல டாடி என் மனசுல என்ன இருக்குதுன்னு தெரிஞ்சிக்க முடியல” என்பதோடு வீடியோ முடிவடைகிறது.

ரக்ஷணாவின் அம்மா உஷா, திருவேற்காடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, `எனது கணவர் சம்பத், டிரைவராக வேலை பார்த்து வருகிறார். எங்களது மூத்த மகள் ரக்ஷணாவை, திருவேற்காட்டை சேர்ந்த ஜெயராமனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். 10.12.2020-ல் புதுமண தம்பதிகளை திருவேற்காடு வீட்டில் விட்டுவிட்டு சென்றோம். 19.12.2020-ம் தேதி ரக்ஷணா எங்களிடம் நல்லமுறையில் பேசினார். ஆனால், அன்றைய தினம் மாலை 6.30 மணியளவில் ரக்ஷணா இறந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. திருவேற்காட்டிற்கு சென்று பார்த்தபோது படுக்கையில் ரக்ஷணா இறந்தநிலையில் காணப்பட்டாள். துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டதாகக் கூறினார்கள். இறப்பு குறித்து முறையாக விசாரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரக்ஷணா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பதிவு செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-girl-commits-suicide-after-her-marriage